×

மத்திய பேரிடர் மீட்பு குழுவினர் இளையான்குடி பகுதியில் ஆய்வு

இளையான்குடி, செப். 19: சிவகங்கை மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் புயலால் பாதிக்கப்படும் இடங்களை பார்வையிடவும், மழை மற்றும் வெள்ள சேதங்களால் ஏற்படும் பாதிப்புகளை கண்டறியவும், அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நான்காம் பேரிடர் மீட்பு படை இன்ஸ்பெக்டர் மாரிக்கனி தலைமையில் 30 பேர் நேற்று இளையான்குடிக்கு வந்தனர்.
சிவகங்கை பறக்கும்படை தனித்துணை வட்டாட்சியர் முத்துவேல், தாசில்தார் பாலகுரு, மண்டல துனை வட்டாட்சியர் விஜகுமார், ஆர்ஐ நந்தினி, பார்த்திபண் ஆகியோர் முன்னிலையில் இளையான்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ள சேதப்பகுதிகளையும், மீட்பு நடவடிக்கைகளை மேற்கொன்வதற்கான ஆலோசனைகளையும் விளக்கினர்.பின் வைகை பாயும் பெரும்பச்சேரி, திருவுடையார்புரம் கால்வாய், இளையான்குடி பெரிய கண்மாய் ஆகிய பகுதிகளில் பேரிடர் மீட்பு படையினர் ஆய்வு செய்தனர்.

Tags : Central Disaster Rescue Team ,
× RELATED நாய் குட்டிகளுக்கு 3 மாதத்தில் தடுப்பூசி போட அறிவுறுத்தல்