×

பழநி கோயில் சிகை தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் வேண்டும்

பழநி, செப். 19: மாத ஊதியம் வழங்க வேண்டுமென பழநி கோயில் சிகை தொழிலாளர்கள் பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் முடியிறக்கும் அனைத்து தொழிலாளர்களின் சிறப்பு பேரவை கூட்டம் நடந்தது. சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் மோகனா முன்னிலை வகித்தார். தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார். செயலாளர் நாட்ராயன் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் கோயில் நிர்வாகம் சிகை தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும். சிகை தொழிலாளர்களை அறநிலையத்துறை ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Palani ,temple hairdressers ,
× RELATED குஜராத்தில் இருந்து பழனி வந்த 33 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு