×

9 இடங்களில் நாளை அம்மா திட்ட முகாம்

திருப்பூர், செப். 19:  திருப்பூர் மாவட்டத்தில் 9 இடங்களில் நாளை (20ம் ேததி) அம்மா திட்ட முகாம் நடக்கிறது. திருப்பூர் வடக்கு வேலம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், திருப்பூர் தெற்கு முதலிபாளையம் சமுதாய நல கூடம், அவிநாசி வடுகபாளையம் கிராம நிர்வாக அலுவலகம், ஊத்துக்குளி புத்தூர்பள்ளபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகம், பல்லடம் சுக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகம், தாராபுரம் புஞ்சைத்தலையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், காங்கயம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், உடுமலைப்பேட்டை மோமவாரப்பட்டி கிராம நிர்வாக அலுவலகம், மடத்துக்குளம் சோழமாதேவி கிராம நிர்வாக அலுவலகம் ஆகிய 9 இடங்களில் அம்மா திட்ட முகாம் நாளை (20ம் தேதி) நடைபெற உள்ளது.

இதில், வருவாய் துறையைச் சேர்ந்த வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், நில வருவாய் ஆய்வாளர், நில அளவைத்துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள், வளர்ச்சித்துறையைச் சேர்ந்த அலுவலர்களும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் கலந்துகொள்கின்றனர். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை  மேற்கொள்ளப்படுகிறது. உடனடியாக தீர்க்க முடியாத கோரிக்கைகள் தொடர்பாக பெறப்படும் மனுக்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு அனுப்பி 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு அதன் விபரத்தை மனுதாரருக்கு தெரிவிக்கப்பட உள்ளது. இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர் பழனிசாமி கூறியுள்ளார்.

Tags : locations ,Mummy Project Camp ,
× RELATED மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம்...