×

பணி நெருக்கடியை கண்டித்து பெருந்திரள் முறையீடு

திருப்பூர், செப் 19:  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு இயக்கத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசும், மாவட்ட நிர்வாகங்களும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகர்களுக்கு அளித்து வரும் பணி நெருக்கடிகளை கண்டித்தும், இந்த போன்ற நிலைகளை முற்றிலும் கைவிடக்கோரியும் மாநிலம் முழுவதும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் முறையீடு நடைபெற்றது.அதன்ஒருபகுதியாக, திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பெருந்திரள் முறையீடிற்கு ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஞானசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் செந்தில்குமார் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

பெருந்திரள் முறையீட்டை துவக்கிவைத்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கரன் பேசினார். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் முருகதாஸ் வாழ்த்தி பேசினார். மேற்கண்ட கோரிக்கைகளை மனுவாக கலெக்டரிடமும் அளித்தனர். இந்த பெருந்திரள் முறையீட்டில் திரளானோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை விளக்கி முழக்கங்களை எழுப்பினர்.

Tags : work crisis ,
× RELATED பெங்களூருவில் பெண் டி.எஸ்.பி....