×

சென்னிமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சுயம்வரம்

சென்னிமலை.  செப். 19:  சென்னிமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சி தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று முன்தினம் நடந்தது.  மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் நடத்தப்பட்ட சுயம்வரம் நிகழ்ச்சியில் ஏரளமானோர் கலந்துகொண்டு தங்களது இணைகளை தேர்வு செய்தனர். தமிழ்நாடு  மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு, கீதா பவன் அறக்கட்டளை,  ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நலச்சங்க மகளிர் அமைப்பு, சரஸ்வதி மக்கள்  கோவிந்தசாமி அறக்கட்டளை மற்றும் யாம் அறக்கட்டளை ஆகியவை இணைந்து 9ம்  ஆண்டாக இந்த சுயம்வரம் நிழ்ச்சியை நடத்தினர்.இதில், ஈரோடு மாவட்ட  மாற்றுத்திறனாளிகளின் சங்க தலைவர் துரைராஜ் வரவேற்றார். தமிழ்நாடு  மாற்றுத்திறனுடையோர் நல சங்க பொது செயலாளர் பேராசிரியர் பொன்னுசாமி தலைமை  வகித்தார். மாநில துணை தலைவர் கருப்பையா மற்றும் மாநில பொருளாளர்  சந்திரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந் நிகழ்ச்சியில், தமிழ்நாடு அனைத்து  மாற்றுத்திறன் மகளிர் வாழ்வுரிமை அமைப்பு மாநில தலைவி திருமதி  லலிதாம்பிகை, சுதா ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர்  சுதாகர், கே.எம்.கே. நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் கண்ணன் ஆகியோர்  குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். இந்த சுயம்வரம்  நிகழ்ச்சியில் சரஸ்வதி கோவிந்தசாமி அறக்கட்டளை தலைவர் மற்றும் தனியார்  பாலிடெக்னிக் கல்லூரியின் சேர்மன் மக்கள் ராஜன் வரன்களை  அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்றினார். இதில் ஏழு ஜோடி மாற்றுத்திறனாளிகள்  சுயம்வரத்தில் தங்களது மணமகன் மற்றும் மணமகளை தேர்ந்தெடுத்தனர்.

Tags : Persons ,Chennimalai ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...