×

விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் புத்தாக்க பயிற்சி முகாம்

சேலம், செப்.19: விநாயகா மிஷன் அலைடு ஹெல்த்சயின்ஸ் துறையில், மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிப்பது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது. பயிற்சி முகாமை, துறையின் டீன் டாக்டர் செந்தில்குமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். திருச்சி நேரு மெமேரியல் கல்லூரி டீன் டாக்டர் தமிழ்மணி மற்றும் பாளையங்கோட்டை செயின்ட் சேவியர் கல்வியியல் கல்லூரியின் முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு இயக்குனர் டாக்டர் போர்ஜியோ ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, புதிதாக கல்லூரிக்கு வரும் மாணவர்களை எவ்வாறு கையாள வேண்டும் மற்றும் கல்லூரியின் வரன்முறைகள், சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு அவர்களை மாற்றும் வழிமுறைகள் பற்றி துறை பேராசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை, துறை பேராசிரியை தமிழ்ச்சுடர் மற்றும் பேராசிரியர் டாக்டர் ஹரிஷ்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.


Tags : Innovation Training Camp ,
× RELATED விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ்...