×

சேலம் மாவட்டத்தில் தேசிய தொலை தொடர்பு சங்கம் வெற்றி

சேலம், செப். 19:சேலத்தில் நடந்த சங்க அங்கீகாரத்திற்கான தேர்தலில் ேதசிய தொலை தொடர்பு சங்கம் வெற்றி பெற்றது.  பிஎஸ்என்எல் நிர்வாகத்துடன் கோரிக்கைகள் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்துவதற்கு சங்கங்கள் அங்கீகாரத்துக்கான தேர்தல் கடந்த 16ம் தேதி இந்தியா முழுவதும் நடந்தது. இத்தேர்தலில் தேசிய தொலை தொடர்பு சங்கம், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் உள்ளிட்ட 18 சங்கங்கள் போட்டியிட்டன.அதில்,  தமிழகத்தில் 18 தொலை தொடர்பு மண்டலங்களில் நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. இதில், சேலம் மாவட்டத்தில் 363 வாக்குகள் பெற்று தேசிய தொலை தொடர்பு சங்கம் வெற்றி பெற்றது. இதுகுறித்து தேசிய தொலை தொடர்பு சங்க மாவட்ட செயலாளர் பாலகுமார் கூறுகையில், ‘‘சங்க அங்கீகாரத்துக்கான தேர்தலில், தமிழகத்தில் தேசிய தொலை தொடர்பு சங்கம் 3,828 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் உள்ள 18 மண்டங்களில், 12 மண்டலங்களில் தேசியதொலைதொடர்பு சங்கமும், 6 பிஎஸ்என்எல் ஊழியர் சங்கமும் வெற்றி பெற்றுள்ளது, என்றார்.

Tags : National Telecommunications Association ,Salem district ,
× RELATED சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்...