×

சித்தர் கோயில் அருகே தடுப்பணை உடைந்தது

இளம்பிள்ளை, செப்.19:  சித்தர் கோயில் அருகே இலகுவம்பட்டியில் தடுப்பணை உடைந்தது.வீரபாண்டி ஒன்றியம் முருங்கப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட இலகுவம்பட்டியில், நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அதிக விவசாயிகளை கொண்ட இப்பகுதியில் நீரோடை உள்ளது. இதில் தண்ணீரை தேக்கி வைக்க கடந்த ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ், ₹1.37 லட்சம் மதிப்பில் நீரோடையில் தடுப்பணை கட்டப்பட்டது.

இதில் சரியான வேலைப்பாடுகளுடன் தடுப்பணை கட்டப்படாததால், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சிறிய மழைக்கே தடுப்பணை உடைந்தது. இதை தொடர்ந்து பொதுப்பணித்துறையினர் உடனடியாக சரி செய்தனர். இந்நிலையில் தற்போது சரிசெய்யப்பட்ட 3 மாதத்திலேயே தடுப்பணை மீண்டும் உடைந்தன. இதை அறிந்த விவசாயிகள் சிறிய மழைக்கே அடிக்கடி தடுப்பணை உடைப்பு ஏற்பட்டு வருவதால், இதனை தரமாக கட்டப்பட வேண்டும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : temple ,Siddhar ,
× RELATED கொரோனா தடையால் வியாபாரிகள் வரவில்லை...