×

காடையாம்பட்டியில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

காடையாம்பட்டி, செப்.19:  காடையாம்பட்டியில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. காடையாம்பட்டி தாலுகா, நடுப்பள்ளியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி சார்பில், ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி, விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட பேரணியை, தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். காடையாம்பட்டி, தீவட்டிப்பட்டி, நடுப்பட்டி ஆகிய ஊர்கள் வழியாக 2 கி.மீ தூரத்திற்கு நடந்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags : Helmet awareness rally ,Quail ,
× RELATED உத்திரமேரூரில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி