×

ஜலகண்டாபுரத்தில் கொப்பரை தேங்காய் ஏலம்

ஜலகண்டாபுரம், செப்.19:ஜலகண்டாபுரத்தில், திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க ஜலகண்டாபுரம் கிளை சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று நடந்த கொப்பரை தேங்காய் ஏலத்தில், ஜலகண்டாபுரம் மற்றும் எடப்பாடி, கொங்கணாபுரம், பூலாம்பட்டி, மேட்டூர், கொளத்தூர், நங்கவள்ளி, மற்றும் தர்மபுரி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் கொப்பரையை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதில் ஈரோடு மற்றும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர். கடந்த வாரம் முதல் தரம் குறைந்தபட்சமாக கிலோ ₹95.60 முதல் ₹96.60 காசுகள் வரையிலும், 2ம் தரம் கிலோ ₹43.60 காசுகள் வரையிலும் ஏலம் போனது. நேற்று நடந்த ஏலத்தில், முதல் தரம் குறைந்த பட்சமாக கிலோ ₹90.60 காசுகள் முதல், அதிகபட்சமாக ₹101.35 காசுகள் வரையும், 2ம் தரம் குறைந்த பட்சமாக கிலோ ₹45.50 காசுகள் முதல் அதிகபட்சமாக ₹61.90 காசுகள் வரையிலும் ஏலம் போனது.


Tags : Coconut auction ,Jalakandapuram ,
× RELATED வெள்ளிங்கிரி மலையில் ஏறிய 3 பக்தர்கள் மூச்சுத்திணறி பலி