×

நாமக்கல்லில் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

திருச்செங்கோடு, செப்.19: திருச்செங்கோடு வேலூர் சாலையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட துணை செயலாளர் சேகர் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர்கள் செல்வராஜ், சுகந்தி மணியம், மாவட்ட பொருளாளர் குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செழியன், யுவராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் அன்பழகன், செல்வராஜ், அம்பிகா முன்னிலை வகித்தனர். மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.எஸ்.மூர்த்தி எம்எல்ஏ தீர்மானங்களை விளக்கி  பேசுகையில், ‘இளைஞர் அணிக்கு தமிழகத்திலேயே அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்,’ என்றார்.

கூட்டத்தில் நகர செயலாளர்கள் திருச்செங்கோடு கார்த்திகேயன், வெங்கடேசன், ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் வட்டூர் தங்கவேல், எலச்சிபாளையம் தங்கவேல், ஆர்.சண்முகம், கேகே.சண்முகம், தனராசு, செல்வராஜ், பழனிவேல், பேரூர் செயலாளர்கள் ரமேஷ்பாபு, மணிமாரப்பன், கருணாநிதி, ராமலிங்கம்,  மகாமுனி, சிவக்குமார், திருமலை இளைஞர் அணி அமைப்பாளர் மதுரா செந்தில், துணை அமைப்பாளர்கள் சரவணன், சுந்தர், சுரேஷ்குமார், செல்வம் மற்றும் பரமானந்தம், ஜிஜேந்திரன், ராஜமாணிக்கம், ரவிமோகன் உள்ளிட்ட பல்வேறு  அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : West District DMK Working Committee Meeting ,Namakkal ,
× RELATED நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.3.55ஆக நிர்ணயம்