×

தேங்காய் வரத்து அதிகரிப்பு

ஆத்தூர், செப்.19: தலைவாசல் மார்க்கெட்டிற்கு தேங்காய் வரத்து அதிகரித்துள்ளது.  தலைவாசலில் உள்ள தினசரி காய்கறி சந்தை, தமிழகத்திலேயே 2வது பெரிய சந்தை ஆகும். சந்தைக்கு தலைவாசல், சின்னசேலம், வீரகனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் காய்கறிகள், கீரை வகைகள், தக்காளி, சின்னவெங்காயம், கருணைக்கிழங்கு, புடலை பீர்க்கன் உள்ளிட்ட நாட்டு காய்கறிகள் அதிக அளவில் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நேற்று சுற்றுவட்டார பகுதியில் இருந்து, அதிக அளவில் தேங்காய் விற்பனைக்கு  கொண்டு வரப்பட்டது. இதனால் தேங்காய் ரகம் வாரியாக பிரிக்கப்பட்டு ₹10 முதல் 16 வரை விற்பனையானது. இந்த தேங்காய்கள் பெரம்பலூர், விழுப்புரம், கடலூர், நெய்வேலி, புதுச்சேரி, சிதம்பரம், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்தன. இதனை வியாபாரிகள் அதிக அளவில் கொள்முதல் செய்தனர். விலை கணிசமாக கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags :
× RELATED தலைவாசல் மார்க்கெட்டுக்கு தேங்காய் வரத்து அதிகரிப்பு