×

ராசிபுரம் அருகே 10க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால்

அவதிராசிபுரம், செப்.19: ராசிபுரம் அருகே பள்ளி மாணவி உள்பட 10க்கும் மேற்பட்டோருக்கு மர்ம காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்களிடையே டெங்கு பீதி ஏற்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த பட்டணம் முனியப்பம்பாளையம் கிராமத்தில் உள்ள அருந்ததியர் தெருவில், நூற்றுக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக, இப்பகுதியில் பரவலாக பெய்து வரும் மழையால், சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, காய்ச்சல் பாதிப்புடன் மருத்துவமனைகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பட்டணம் முனியப்பம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவரது மகளான 10ம் வகுப்பு மாணவி கௌசல்யாவுக்கு கடந்த வாரம், காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதிலும், காய்ச்சல் குணமாகாததால், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. மேலும், இதே பகுதியைச் சேர்ந்த வருதராஜ்,  பூங்கொடி, பாப்பாத்தி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர், கடந்த ஒரு வாரமாக மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், இப்பகுதி மக்களிடையே, டெங்கு பீதி ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக தங்கள் பகுதியில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும் எனவும், சுகாதார பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Rajasthan ,
× RELATED 2024 ஐபிஎல் டி20: டெல்லி அணிக்கு எதிரான...