×

டிரான்ஸ்பார்மரில் தீ விபத்து

தர்மபுரி, செப்.19: தர்மபுரி  அடுத்த அதியமான்கோட்டையில் கலெக்டர், எஸ்பி, திட்ட இயக்குனர் உள்ளிட்ட  அதிகாரிகளின் பங்களாக்கள் உள்ளது. இந்த பங்களா அருகே டிரான்ஸ்பார்மர் உள்ளது. நேற்று முன்தினம் 8 மணியளவில் திடீரென இந்த டிரான்ஸ்பார்மரில் தீ கொளுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த, அப்பகுதி மக்கள் தீயணைப்பு அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையில், சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், மின்விநியோகத்தை நிறுத்தியதுடன், தண்ணீரை  பீய்ச்சி அடித்து, சுமார் அரை மணி நேரத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீவிபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது. மின்சாரம் தடைபட்டது. இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Transformer ,
× RELATED காரில் திடீர் தீவிபத்து