சூளகிரியில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

 சூளகிரி, செப்.19: சூளகிரியில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாளையொட்டி பொதுக்கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் மது(எ)ஹேம்நாத் தலைமை வகித்தார்.முன்னாள் எம்பி அசோக்குமார் விழா சிறப்புரையாற்றினார். எம்ஜிஆர் இளைஞரணி மாநில துணை செயலாளர் நடராஜன், தலைமை கழக பேச்சாளர் காஞ்சி ராமு, சூளகிரி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் தாயப்பன், வேப்பனப்பள்ளி ஒன்றிய செயலாளர் முனியப்பன் ஆகியோர் வரவேற்றனர். கூட்டத்தில், மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள், ஊராட்சி, கிளை கழக செயலாளர்கள், சார்பு அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Tags : Anna ,birthday party ,
× RELATED அண்ணாநகர் அஞ்சலக அலுவலகம் இடமாற்றம்