×

ஜிங்கல்கதிரம்பட்டியில் பல்லாங்குழி சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

போச்சம்பள்ளி, செப்.19: ஜிங்கல்கதிரம்பட்டியில் தார்சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர். போச்சம்பள்ளி தாலுகா, ஜிங்கல்கதிரம்பட்டி கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திலிருந்து தர்மபுரி, போச்சம்பள்ளி பகுதிகளுக்கு செல்ல 2 கி.மீ தூரமுள்ள மேட்டுக்கடைக்கு வந்து செல்ல வேண்டும். இந்நிலையில், இப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட தார் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமமடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘தர்மபுரி, கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, மத்தூர் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி பஸ்கள் காரைகுட்டை, ஜிங்கல்கதிரம்பட்டி, பாப்பானூர், கிராமத்திற்கு வந்து மாணவ, மாணவிகளை ஏற்றி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், இந்த தார்சாலை மோசமான நிலையில் இருந்ததால் கல்லூரி, வாகனங்கள் பலமுறை பஞ்சரானது. இதனால், இப்பகுதிக்கு வரும் கல்லூரி பஸ்கள் 2 கி.மீ தூரத்திற்கு முன்பே நிறுத்தப்பட்டதால், மாணவர்கள் மிகுந்த அவதியடைந்துள்ளனர். எனவே, காரைகுட்டையிலிருந்து ஜிங்கல்கதிரம்பட்டி வழியாக மேட்டுக்கடை வரை புதிய தார்சாலையை விரைந்து அமைக்க வேண்டும்,’ என்றார்.

Tags : Motorists ,collision road ,Jingalgadirampatti ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...