×

மோடி பிறந்த நாள் கொண்டாட்டம்

தர்மபுரி, செப்.20: தர்மபுரி பாஜ சார்பில், பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு, கடைவீதி அங்காளம்மன் பரமேஸ்வரி கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, பாஜ மாநில செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சரவணன், தினேஷ் குமார், சிலம்பரசன், பிரபு, ஆறுமுகம், கோகுலக்கண்ணன், ரத்தினகுமார், சுகுமாரன், ஜெயபிரகாஷ், முருகன், காமராஜ், மணிகண்டன், மோகன், வெங்கடேஷ், பாக்யராஜ், வைத்தியநாதன், அசோக்குமார், செயலாளர் பார்த்தசாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Modi Birthday Celebration ,
× RELATED தர்மபுரியில் தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட ஜவுளி பூங்கா திட்டம்