ஜெயங்கொண்டம் மாடர்ன் கல்லூரியில் ராயல் சென்டினியல் லயன்ஸ் சங்கம் சார்பில் ரத்ததான முகாம்

ஜெயங்கொண்டம் ,செப். 19: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மாடர்ன் கல்லூரியில் அரியலூர் அரசு மருத்துவமனை மாவட்ட ரத்த வங்கி, ஜெயங்கொண்டம் ராயல் சென்டினியல் லயன்ஸ் சங்கம் மற்றும் மாடர்ன் கல்லூரி சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. முகாமில் மாடர்ன் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர். கட்டிட பொறியாளர் சங்க மாநில துணை செயலாளர் சிவக்குமார், மாடர்ன் கல்வி நிறுவனத் துணைத்தவைர் சுரேஷ், சமூக ஆர்வலர்கள் பொறியாளர் அறிவழகன், மத்தியாஸ், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முகாமில் சேகரிக்கப்பட்ட ரத்தம் டாக்டர் ஆண்டனி ஷெர்லி ரோஸ் செவிலியர் செந்தில் ராணி ஆகியோர் கொண்ட குழுவினர் அரியலூர் மாவட்ட ரத்த வங்கிக்கு கொண்டு சென்றனர். முடிவில் ஆறுமுகம் நன்றி கூறினார்.

Related Stories: