×

மக்காச்சோளப்பயிரில் படைப்புழு தாக்கம் எதிரொலி 6 கிராமங்களில் உள்ள வயல்களில் வேளாண் அதிகாரி, விஞ்ஞானிகள் ஆய்வு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஏற்பாடு

பெரம்பலூர்,செப்.19: மானாவாரி சாகுபடியை நம்பியுள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் 1.27லட்சம் ஏக்கர் பரப்பளவில் மக்கா ச்சோளமும், 50 ஆயிரம் ஏக் கரில் பருத்தியும் சராசரி யாக சாகுபடி செய்யப்பட்டு வருவதுகுறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 3சந்ததிகளாகத் தங்கி 3 ஆண்டுகளுக்கு விடாமல் தாக்குதல் நடத்தி சேதம் விளைவிக்கும் பரம்பரை குணம் கொண்ட படைப்பு ழுக்களைக் கட்டுப்படுத்த முடியாததால் நடப்பா ண்டும் மக்காச்சோள வயல்களில் படைப்புழுக்க ளின் தாக்கம் காணப்படு வதால் விவசாயிகள் பெரிதும் அச்சமடைந்தனர். தமிழகஅரசு, 2018 ல் பெரு மளவு பாதிப்பை ஏற்படுத் திய படைப் புழுக்கள், 2019லும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை தெரிந்திருந்தும், அதற்கு ரிய விதைவிற்பனைகளை தடைசெய்யவோ, விவசாயி களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவோ, அதற்கு ஈடாக மாற் றுப் பயிர் சாகு படியில் ஈடுபட வலியுறுத்தி யோ பிரசாரங்களை மேற் கொள்ளாததால், மக்காச் சோள விவசாயிகள் நடப் பாண்டும் அதே சாகுபடி யில் ஈடுபட்டு ஆபத்தை விலைகொடுத்து வாங்கியு ள்ளனர்.

இது குறித்து வெளியான புகார்களைத் தொடர்ந்து பெரம்பலூர் கலெ க்டர் சாந்தா உத்தரவின் பேரில் 4 வட்டாரங்களிலும் வேளாண்மை துறை அலு வலர்கள் களமிறங்கி ஆய் வு பணிகளை மேற்கொண் டனர்.இந்நிலையில் நேற்று தமிழ்நாடு அரசு வேளாண் மைத் துறை கூடுதல் இயக் குனர் (ஆராய்ச்சி) சுப்பை யா தலைமையில், விஞ்ஞா னிகளான திருச்சி மாவட் டம் நவலூர் குட்டப்பட்டு தமிழ்நாடு அரசு வேளாண் மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பூச்சியியல்துறை இணைப் பேராசிரியர் யசோதா, வாலிகண்டபுரம் ரோவர் வேளாண் அறிவியல் மைய பூச்சியியல் வல்லு நர் திவ்யா ஆகியோர் பெரம்பலூர் மாவட்டத்தில் 4 தாலுகாக்களில் உள்ள 6 கிராமங்களில் உள்ள வயல்களுக்குச் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்ட னர்.
குறிப்பாக பெரம்பலூர் தாலுகாவில் எசனை, வேப் பந்தட்டை தாலுக்காவில் வேப்பந்தட்டை, வ.மாவலி ங்கை, குன்னம் தாலுக்கா வில் நமையூர், முருகன்குடி, ஆலத்தூர் தாலுக்காவில் நாரணமங்கலம் ஆகிய 6 கிராமங்களில் மக்காச் சோ ள வயலில் படைப்புழு தாக் கம் குறித்து ஆய்வு செய்த னர். இதில் நமையூர் கிரா மத்தில் சுரேஷ் என்ற விவ சாயி வயலிலும், முருகன் குடி கிராமத்தில் பாலுசாமி என்கிற விவசாயி வயலி லும் தமிழ்நாடு வேளாண் மைத்துறை கூடுதல் இயக் குனர் சுப்பையா மற்றும் விஞ்ஞானிகளான பூச்சி யியல் துறை வல்லுனர்கள் துல்லியமான ஆய்வு பணி களை மேற்கொண்டனர்.

அப்போது படைப்புழு தாக் கத்தைக் கட்டுப்படுத்தக்கூ டிய இயற்கை மருந்தான மெட்டாரைசியம் என்ற மருந்தினை 50 சதவீத மா னியத்தில் விவசாயிகளு க்கு வழங்கினர். அதோடு அப்பகுதியில் வைக்கப்பட் டுள்ள இனக்கவர்ச்சிப் பொறிகளை ஆய்வு செய்த னர். இந்த ஆய்வின்போது பெரம்பலூர்மாவட்ட வேளா ண்மைத் துறை இணை இயக்குனர் கணேசன், வேளாண் அலுவலர்கள் (தரக்கட்டுப்பாடு) சண்மு கம் உடனிருந்தனர்.

ஆய்வு அறிக்கை தாக்கல்...

இந்த ஆய்வுகளின் முடி வில் சேகரிக்கப்பட்ட தக வல்களைக் கொண்டு ஆய்வுகுறித்த அறிக்கை யைத் தயாரித்து, தமிழக அரசுக்குத் தாக்கல் செய்ய உள்ளனர். கடந்த ஆண்டு தமிழக அளவில் படைப்புழு தாக்கம் பெரம்பலூர் மாவ ட்டத்தில் மிக அதிகமாகக் காணப்பட்ட நிலையில், நடப்பாண்டும் படைபுழு தாக்கம் காணப்படுவதால் மக்காச்சோள விவசாயி களுக்கு ஏற்பட்ட பேரச்சத் திலிருந்து விடுபட, இந்த ஆய்வின் முடிவு ஏதுவாக இருக்கும் என எதிர்பார்க் கப்படுகிறது.

Tags : Organization ,filing ,Agriculture Officer ,Scientists ,fields ,villages ,
× RELATED இந்திய தேசிய வருமானத்தில் நிலவும்...