×

பெரம்பலூரில் பைக் மீது அரசு பஸ் மோதல் டிரைவர், இளைஞர் வாக்குவாதத்தால் போக்குவரத்து நெரிசல்

பெரம்பலூர்,செப்.19: பெரம் பலூரில் பைக்மீது அரசு பஸ் மோதியவிபத்தில் பஸ் டிரைவரும், இளைஞரும் வாக்குவாதத்தில் ஈடுபட் டதால் போக்குவரத்து நெரி சல் ஏற்பட்டது. பெரம்பலூர் மாவட்டம், குன் னம் தாலுகா, அந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜா மகன் மணிகண்டன் (27). இவர் பெரம் பலூர் பழைய பஸ்ஸ்டாண் டிலிருந்து அந்தூர் கிராமத்திற்குச் செல்வதற்காக தனது பைக்கில் நேற்று சென்று கொண்டிருந்தார். பெரம்பலூர் திருச்சி மெயின்ரோட்டில் வெங்கடேசபு ரம் பகுதியில்சென்றபோது துறையூரிலிருந்து வந்த அரசு புதுபஸ்ஸ்டாண்டை நோ க்கிச் சென்றபோது எதிர் பாராதவிதமாக பைக்கின் மீதுமோதியதால் விபத்து ஏற்பட்டது.

இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த மணிகண் டன், பஸ்டிரைவரிடம் முறை யிட்டதில் இருவருக்கும் இடையே கடும்வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பரபரப்பாகக் காணப்படும் பெரம்பலூர் திருச்சி மெயின்ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது அவ்வழியே வந்த டிராபிக் போலீஸ் ஒருவர், பஸ் டிரைவரிடம் சாலையின் நடுவே வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப் பட்டிருப்பதைக் கண்டு மணிகண்டனை அடித்து, எச்சரித்துவிட்டுச் சென்றதால் டிரைவரோடு பிரச்னைக்குக் காரணம் யாரெ னக் கேட்டு டிரைவரிடம் வாக்குவாதம் ஏற்பட்டதால் நகரின் முக்கிய சாலையில் சுமார் அரை மணி நேரத்தி ற்கும் மேலாக போக்குவர த்து நெரிசல் ஏற்பட்டது. பிறகு மற்ற போலீசார் மணிகண்டனை சாலை யின் ஓரத்திற்கு அழைத் துச் சென்று சமாதானம் செய்ததால் போக்குவரத்து சீரானது.

Tags : State bus collision driver ,Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி