×

முதன்முறையாக கீழப்பெரம்பலூர், வடக்கலூர் ஏரிகள் 100% நிரம்பியது கிராம மக்கள் கொண்டாட்டம்

பெரம்பலூர்,செப்.19: பெரம் பலூர்மாவட்டத்தில் பருவத் தின் இறுதியில் தொடர்ந்து பெய்துவரும் தென்மேற்கு ப் பருவமழை.பெரம்பலூர் மாவட்டத்தில் முதன்முறை யாக கீழப்பெரம்பலூர், வடக்கலூர் ஏரிகள் 100சதவீதக் கொள்ளளவை எட்டியதால் நிரம்பிவழிகின்றன. கிராம மக்கள் கொண்டாட்டத்தில் உள்ளன பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பின் கட்டுப்பாட்டில் மொத்தம் 73 ஏரிகள் உள்ளன.ஊரக வள ர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் 200க்கும் மேற்பட்ட குளம், குட்டை, ஊரணிகள் உள் ளன.பெரம்பலூர் மாவட்டத் தின் ஆண்டு சராசரி மழை யளவு 861மிமீஆகும். இதில் குளிர்காலமான ஜனவரி, பிப்ரவரியில் 26மிமீ, கோ டை காலமான மார்ச், ஏப் ரல், மே மாதங்களில் 99மிமீ, தென்மேற்குப் பருவமழை பெய்யும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங் களில் 270 மிமீ, வடகிழக் குப் பருவமழை பெய்யும் அக்டோபர், நவம்பர், டிசம் பர் மாதங்களில் 466மிமீ மழை சராசரியாகப் பெய்ய வேண்டும். ஆனால் கடந்த 20ஆண்டுகளில் இதுவரை இல்லாதபடிக்கு கடந்தாண் டு 2018ல் மிகமிகக் குறை வாக 492.67மிமீ மட்டுமே பெரம்பலூர் மாவட்டத்தில் பதிவானது. அதன் தொடர்ச்சியாக நடப் பாண்டு ஜனவரி தொடங்கி 8மாதங்கள்ஆனநிலையில் சராசரி யாக பெய்ய வேண் டிய 861மிமீ மழைக்குபதில் 210 மிமீ மழைமட்டுமே பதி வாகி 25சதவீத மழைகூட பெய்யாதிருந்தது. ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் வரை 395மிமீ மழை பதி வாக வேண்டும். ஆனால் 10நாட்களே பாக்கியுள்ள நிலையில் அதில் 55சதவீத மழையே பதிவாகியுள்ளது. இதனால் கடந்த ஆண்டை விட மிகக்குறைந்த மழை பதிவாகு மென அஞ்சப்பட்டது.

இந்நிலையில் சற்று ஆறுத லாக தென் மேற்குப் பருவ மழை கடந்த சிலதினங்க ளாக தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 11ம்தேதி 174மிமீ மழைபெய்தது. சராசரி மழையளவு 15.82 ஆகும். 13ம்தேதி 366 மிமீ மழை பெய்தது. சராசரி மழையளவு 33.27ஆகும். 15ம்தேதி 101மிமீ மழைபெய்தது. சராசரி 9.18ஆகும். 16ம்தேதி 249மிமீ பெய்தது. சராசரி 22.64ஆகும். 17ம் தேதி 228 மிமீ மழை பெய்தது. சராசரி 20.73ஆகும். இதன் காரண மாக படிப்படியாக மலைகளில், ஓடைகளில், மேட்டுநி லங்களில் பெய்த மழை வரத்து வாய்க்கால்கள் வழியாக ஏரிக்கு வந்தடைந்ததால் சில ஏரிகளின் நீர்மட்டம் படி ப்படி யாக உயர்ந்து வந் த து. இந்நிலையில் 15ம்தேதி யன்று 35சதவீதமே நிரம்பி யிருந்த கீழப் பெரம்பலூர் ஏரி,கடந்த 2நாட்களாக தொ டர்ச்சியாக மழைபெய்வதா ல் நேற்று 100சதவீதத்தை எட்டியது. அதே போல் வடக்கலூர் ஏரியும் 100சதவீதத் தை எட்டியதால்நிரம்பி வழி கிறது.இதனை நேரில் செ ன்றுவிவசாயிகள், இளை ஞர்கள், சிறுவர் சிறுமியர் வழிந்தோடும் கடகால் பகு திகளில் குளித்துக் கும்மா ளமிட்டு வருகின்றனர். இதனால் சுற்றுவட்டாரப் பகுதிகள்பாசனவசதி பெற வும், நிலத்தடி நீர்மட்டம் உயரவும் வாய்ப்பு. இந் நிலையில் ஆய்குடி ஏரி 50 சத வீதக் கொள்ளளவை எட்டியுள்ளது குறிப்பிடத் தக்கது.

இதோடு ஆண்டுக்கு சராச ரியாக 466மிமீ பெய்யவே ண்டிய வடகிழக்குப் பருவ மழை ஏய்க்காமல் தொடர்ந் து பெய்தால் விதைத்த மக் காச்சோளம், பருத்திப் பயிர் களை பேரிழப்பு நேராமல் காப்பாற்றமுடியும் என பெர ம்பலூர் மாவட்ட விவசாயி கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 8 ஏரிகள் 25 சதவீதத்திற்கு மேல் நிரம்பியுள்ளன பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டி லுள்ள 73ஏரிகளில் பெரம்பலூர் வெள்ளந்தாங்கியம்மன் கோயில் ஏரி, துறை மங்கலம் ஏரி,  நெற் குணம்ஏரி, கண்ணாப்பாடி ஏரி, டி.களத்தூர் சின்ன ஏரி, பெரியஏரி, தேனூர்ஏரி, லாடபுரம் ஏரி ஆகிய 8ஏரிகள் 25 சதவீதத்திற்கு மேல் நிரம்பியுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

Tags : lakes ,Keezha Perambalur ,celebration ,
× RELATED சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் 71.91 சதவீதம் நீர் இருப்பு..!!