×

10 ஆண்டுக்கு குறைவாக பணியாற்றி இருந்தாலும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் சங்க கூட்டத்தில் தீர்மானம்

கரூர்,செப்.19: 10 ஆண்டுகளுக்கு குறைவாக பணியாற்றி இருந்தாலும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க கரூர் மாவட்ட கிளைக்கூட்டம் ராமசாமி தலைமையில் நடைபெற்றது. பெரியசாமி, கருப்பன், முத்துசாமி, பொதுச்செயலாளர் சிவசங்கரன், கோவிந்தராஜ், ஆனந்தன், சதாசிவம், பெரியசாமி, ருக்மணி, நாகேந்திரகிருஷணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு பண்டிகை முன்பணம் வழங்கியதற்கு நன்றி தெரிவிப்பதோடு குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்க வேண்டும். ஒருநபர் குழு அறிக்கையை வெளியிட்டு 21மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புநிதி ரூ.1,50,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். 10ஆண்டுகளுக்கு குறைவாக பணியாற்றி இருந்தாலும் அவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கவேண்டும். ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் மாதத்தில் எந்த நாட்களில் இறந்திருந்தாலும் அந்த மாதத்திற்குரிய முழு ஓய்வூதியம்அனுமதிக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : association meeting ,
× RELATED புதிய வயவந்தனா திட்டம்: எல்ஐசி அறிவிப்பு: மாத பென்ஷன் 9,250