×

5ம் வகுப்பு பொதுத்தேர்வை கண்டித்து கரூரில் ஆர்ப்பாட்டம்

கரூர்,செப்.19: 5ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை கண்டித்து கரூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 5, மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதை கைவிடவேண்டும். இந்தியை திணிக்கும் அமித்ஷாவின் பேச்சைக் கண்டித்தும், கிராமப்புற ஏழை மாணவர்களை பள்ளிப்படிப்பில் இருந்து விரட்டும் அரசாணையை திரும்ப பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் பேருந்துநிலையம் அருகே ஆர்எம்எஸ் அலுவலகம் முன்பு நேற்று மாலை புரட்சிகர மாணவர், இளைஞர் முன்னணி கரூர் மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் சுரேந்திரன், மாநில ஒருங்கிணப்பாளர் கணேசன் ஆகியோர் கோரிக்கை வலியுறுத்தி பேசினர்.

Tags : Karur ,protests ,general election ,
× RELATED அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற...