கரூரில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி விவசாயிகள் கவலை

கரூர்,செப்.19: கரூரில் தக்காளி விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் விசாயிகள் கவலையடைந்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் தக்காளி விளைச்சல் துவங்கியுள்ளது. மேலும் ஒட்டன்சத்திரம், கொடுமுடி, போன்ற இடங்களில் இருந்தும் தக்காளி வரத்து தொடங்கியிருக்கிறது. ராயக்கோட்டை தக்காளி மார்க்கெட்டில் இருந்தும் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது, இதனால் தக்காளி விலை வீழ்ச்சியடைந்துள்ளது. உழவர் சந்தைகளில் தக்காளி விலை கிலோ ரூ.10ஆக குறைந்துவிட்டது. கடைகளில் ரூ.15, ரூ.20 என விற்பனை செய்கின்றனர். மிகவும் சிரமப்பட்டு கிணற்றுப்பாசனத்தில் தக்காளி பயிரிட்டும் பறிப்பதற்கும் உரிய ஆள்கூலிக்குக்கூட விலை கட்டுப்படியாக வில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

வயல்களில் கிலோ ரூ.4, ரூ.5 வரை தான் கொள்முதல் விலையாக கொடுக்கின்றனர். போக்குவரத்துக்கு செலவு சேர்த்து கடைகளில் விற்பனை செய்கின்றனர். தக்காளி விளைச்சல் உள்ள காலங்களில் அதனை பதப்படுத்தி வைத்து விற்பனை செய்வதற்கு குளிர்பதன கிடங்கு அமைக்கவேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்தும் அரசால் கண்டுகொள்ளப்படாமலேயே இருப்பதாக விவசாயிகள்வேதனை தெரிவித்தனர்.

Tags : Karur ,
× RELATED விவசாயிகள் கோரிக்கை கரூர் நகரின்...