×

தமிழக அரசு நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வருகிறது

புதுக்கோட்டை,செப்.19: புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், நார்த்தாமலை கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமையில் கந்தர்வக்கோட்டை எம்எல்ஏ ஆறுமுகம் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது கலெக்டர் உமாமகேஸ்வரி பேசியதாவது:புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் பொதுமக்களின் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் தமிழக அரசின் திட்டங்கள் குறித்து தொடர்புடைய அலுவலர்கள் திட்ட விளக்க உரையாற்றினார்கள்.

மேலும் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் பொது மக்கள் பார்த்து பயனடையும் வகையில் அரசின் திட்டங்கள் மற்றும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு நீர்மேலாண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வருகிறது. இதன்படி மழைநீர் சேகரிப்பு, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேளாண்மைத்துறையில் விவசாயிகள் அதிக மகசூல் பெறும் வகையில் நவீன வேளாண் தொழில் நுட்பங்கள் குறித்தும், அதிக மகசூல் கிடைக்கும் பயிர் உற்பத்தி குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்வு கூட்டத்தில் கடந்த மாதம் சுமார் 10,000 மனுக்கள் பெறப்பட்டு சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் தீர்வுகான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் பொது மக்களுக்கு பல்வேறு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனை அனைவரும் உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இந்த நிகழ்ச்சியில் வருவாய்த்துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 551 பயனாளிகளுக்கு ரூ.60,72,046 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டுள்ளது. என்றார்.

Tags : Government of Tamil Nadu ,
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...