×

இலவச மின் இணைப்பு கேட்டு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை,செப்.19: இலவச மின் இணைப்பு கேட்டு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுக்கோட்டை மின்வாரிய அலுவலகம் முன் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன  விவசாயிகள்  சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இருபது வருடங்களாக இலவச மின் இணைப்பு கேட்டு விண்ணப்பத்த ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு விரைந்து மின் இணைப்பு வழங்க வேண்டும். இதபோல் தட்கல் திட்டத்தில் பணம் கட்டினால் மின் இணைப்பு என்று சொல்லி பணத்தை பெற்றுக்கொண்டு கடந்த சில மாதங்களாக மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. அவர்களுக்கும் மின் இணைப்பு விரைந்து வழங்க வேண்டும். இதபோல் சேதமடைந்த மின்கம்பங்களை விரைந்து சரி செய்ய மின்வாரி அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்துகொண்டனர்.

Tags : Farmers' Association ,
× RELATED உயரழுத்த மின் இணைப்பு கட்டணம்...