×

பொதுமக்களுக்கு நலவழித்துறை அறிவுறுத்தல் பிடிஓ இடமாற்றம் கண்டித்து ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்கொள்ளிடம், செப்.19: கொள்ளிடத்தில், பிடிஓ இடமாற்றம் செய்ததை கண்டித்து ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.நாகை மாவட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமமூர்த்தி, சீனிவாசன், முத்துராஜா ஆகியோர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மாவட்டம் விட்டு வேறு மாவட்டத்திற்கு திடீர் இட மாறுதல் செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊரக வளர்ச்சிதுறை அலுவலர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் வேல்கண்ணன் தலைமை வகித்தார். மாநில செயலாளார் சவுந்திரபாண்டியன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags : Rural Development Department ,protest demonstration ,public ,welfare department ,
× RELATED 3 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்