×

தேத்தாகுடி தெற்கில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

வேதாரண்யம், செப்.19: முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுகூட்டம் தேத்தாகுடி தெற்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அதிமுக ஒன்றிய செயலாளர் கிரிதரன் தலைமை வகித்தார். நகர செயலாளர் எழிலரசு வரவேற்றார். அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில் தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் அவை பாலசுப்பிரமணியன், பேரூர் கழக செயலாளர் சவுரிராஜன், தலைமை கழக பேச்சாளர்கள் நெத்தியடி நாகையன், மதுரை ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்க தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Tags : Anna ,birthday party ,south ,
× RELATED பி.எப்.நிதி பாக்கி உத்தரவுக்கு எதிராக அண்ணா பல்கலை. மேல்முறையீடு