×

சீதளாதேவி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

வேதாரண்யம், செப்.19: வேதாரண்யம் தாலுகா வடமழையில் சீதளாதேவி மாரியம்மன் மற்றும் மகா காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில்களின் திருப்பணி வேலைகள் முடிவடைந்த நிலையில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.முன்னதாக கணபதி ஹோமம், அனுக்ஞை, வீக்னேஸ்வர பூஜை வாஸ்து சாந்தி உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை கோபூஜை துவார பூஜை 2ம் கால யாகசாலை பூஜை நடந்தது. இதை தொடர்ந்து கடங்கள் புறப்பாடு நடைபெற்றது.பின்னர் சீதளாதேவி மாரியம்மன் கோயில் மற்றும் மகாகாளியம்மன் கோயில் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றன. கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.Tags : Seethaladevi Mariamman Temple ,
× RELATED பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்க நாள் ஒன்றுக்கு 2000 மாஸ்க் தயாரிப்பு