×

போஷன் அபியான் திட்டத்தின் கீழ் வேதை அரசு மருத்துவமனையில் ஊட்டச்சத்து உணவு கண்காட்சி

வேதாரண்யம், செப்.19: வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் ஊட்டச்சத்து உணவு பற்றிய கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை வேதாரண்யம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சுதர்சன் துவக்கி வைத்தார்.கண்காட்சியில் தேசிய ஊட்டசத்து குழுமத்தின் நோக்கமான கர்ப்பிணி பெண்கள் வளர்இளம் பெண்கள் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளிடையே காணப்படும் ஊட்டசத்து குறைப்பாட்டை போக்குவது குறித்து விளக்கப்பட்டது.நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கல்யாணி, வட்டார உதவி ஒருங்கிணைப்பாளர் சித்ரா, மேற்பார்வையாளர் ராணி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.கண்காட்சியில் சிறு தானியங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் ஊட்டசத்து தரும் பொருட்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது. இக்கண்காட்சியை நூற்றுக்கணக்கானோர் பார்த்து பயனடைந்தனர்.


Tags : Nutrition Food Exhibition ,Vedic Government Hospital ,
× RELATED ஊட்டச்சத்து உணவு கண்காட்சி