×

வேதாரண்யம் அருகே வேகமாக நிரம்பும் ஆள்கொண்டான் ஏரி

வேதாரண்யம், செப்.19: வேதாரண்யம் பகுதியை வந்தடைந்த மேட்டூர் அணை நீரால் ஆள்கொண்டான் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் திருத்துறைப்பூண்டி வழியாக கடலில் இணையும் முள்ளியாற்றை கடந்த வாரம் வந்தடைந்தது. தகட்டூர், ஆதனூர் வரையில் செல்லும் மானங்கொண்டான் ஆற்றில் மருதூர் பகுதியில் பாலம் கட்டுமானப் பணி நடைபெறுவதால் அந்த ஆற்றில் தண்ணீர் செல்வது தடைபட்டுள்ளது.
இந்நிலையில் முள்ளியாற்றின் கடைசி படுகை அணை அமைந்துள்ள வாய்மேடு, தென்னடார், பஞ்சநதிக்குளம் பகுதியை வந்தடைந்துள்ளது. மானங்கொண்டான் ஆற்றில் செல்ல வேண்டிய தண்ணீர் இப்பகுதியில் பெருக்கெடுத்துள்ளது.

இதையடுத்து அப்பகுதியில் உள்ள ஆள்கொண்டான் ஏரிக்குள் நிரம்பிவரும் தண்ணீர் பஞ்சநதிக்குளம் நடுசேத்தி வழியாக கிராமப்புறங்களை நோக்கி செல்கிறது. இதனால் விவசாயம் செழிப்படையும் என விவசாயிகள் கூறுகின்றனர்.இப்பகுதியில் பராமரிப்பற்ற கால்வாய்களை கடந்து ஆயக்காரன்புலம் 3, பன்னாள், கருப்பம்புலம், கடிநெல்வயல் வரையிலான கிராம நீர்நிலைகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது. வழக்கமாக பெரு வௌ்ளக் காலத்திலும் வடிகால் தேவையின்போதும் தண்ணீர் பெருக்கெடுக்கும் இந்த நீர்நிலை பகுதியில் பல ஆண்டுகளுக்கு பிறகு பருவமழை தொடங்கும் முன்பே தண்ணீர் வந்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரத்தில் பாலம் கட்டுமானப் பணியில் பராமாpப்பு குறைபாடு காரணமாக பாசனம் உடனே தேவைப்படும் இடங்களுக்கு தண்ணீர் செல்வதில் தேக்க நிலையுள்ளது.

Tags : Lake Vedaranyam ,filling lake ,
× RELATED பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்க நாள் ஒன்றுக்கு 2000 மாஸ்க் தயாரிப்பு