×

சாத்தான்குளம், எட்டயபுரத்தில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா

சாத்தான்குளம், செப்.19: சாத்தான்குளம் விஸ்வகர்மா பொதுத்தொழிலாளர் சங்க 13ம் ஆண்டுவிழா, 65வது விஸ்வகர்மா ஜெயந்தி விழா மற்றும் தேசிய தொழிலாளர் தினவிழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. சங்கரன் தலைமை வகித்தார். துணை செயலாளர்கள் ஆவுடையப்பன், பேச்சிமுத்து முன்னிலை வகித்தனர். சங்க அமைப்பாளர் மூக்காண்டி வரவேற்றார். மாவட்ட விஸ்கர்மா மகாஜன சங்க முன்னாள் துணை செயலாளர் மகாராசன், விஸ்வகர்மா கொடியேற்றி இனிப்பு வழங்கினார். இதில் கலுங்குவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் அணிஸ் அந்தோணி, நகர மதிமுக அமைப்பாளர் ஜெயராஜ், ரெங்கநாதன், சங்க உறுப்பினர்கள் ஆறுமுகம்இ சிவனனைந்த பெருமாள், செந்திலாறுமுகம், நாராயணன், அழகப்பன் உள்ளிட்ட பலர் பங்ேகற்றனர். ஆறுமுகம் நன்றி கூறினார்.

எட்டயபுரம்: எட்டயபுரத்தில் விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கத்தின் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா நடந்தது. தூத்துக்குடி மாவட்ட விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்க இளைஞர்அணி செயலாளர் சங்கரலிங்கம் தலைமை வகித்தார். எட்டயபுரம் விஸ்வகர்மா கல்வி அமைப்பின் தலைவர் செந்தில்முருகன் முன்னிலை வகித்தார். எட்டயபுரம் நகர கைவினைஞர்கள் சங்க தலைவர் மாலையப்பன் இனிப்புகள் வழங்கி பேசினார். மேலநம்பிபுரம் ராஜா, சுரைக்காய்பட்டி மகேந்திரன், பாலமுருகன், சேகர், வெங்கடேஷ் உட்பட சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags : Viswakarma Jayanthi Festival ,Ettayapuram ,Sathankulam ,
× RELATED எட்டயபுரத்தில் சூதாடிய 4 பேர் கைது