×

எட்டயபுரத்தில் ஊட்டச்சத்து மாதவிழா

எட்டயபுரம், செப்.19: எட்டயபுரத்தில் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் கீழஈரால் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் எட்டயபுரத்தில் உள்ள தனியார் தீப்பெட்டி தொழிற்சாலையில் தேசிய ஊட்டச்சத்து மாதவிழா நடந்தது. கோவில்பட்டி சுகாதார பணிகள் துணை இயக்குநர் போஸ்கோராஜா தலைமை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கருணாநிதி வரவேற்றார். ரத்தசோகை தடுப்பு குறித்து கீழஈரால் ஆரம்ப சுகாதார நிலைய உதவி மருத்துவர் கவுசிக்சுந்தர், வளர்இளம்பெண்கள் நலக்கல்வி குறித்து மருத்துவர் மோனிஷா, ஊட்டச்சத்து பயன்படுத்துவது குறித்து கோவில்பட்டி வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சண்முகசுந்தரி ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு ஊட்டசத்து பயன்படுத்துவோம், என்பது குறித்து உறுதிமொழி எடுத்தனர். கீழஈரால் ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் சுப்பிரமணி துணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் மாரிமுத்து உட்பட பலர் பங்கேற்றனர். செவிலியர் ஜான்திலகவதி நன்றி கூறினார்.

Tags : Nutrition Month Festival ,Ettayapuram ,
× RELATED கோவில்பட்டி, எட்டயபுரம் பகுதியில்...