×

ஆழ்வார்திருநகரியில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை நிச்சயம்

ஸ்ரீவைகுண்டம், செப். 19: ’ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை நிச்சயமாக உண்டு’’ ஆழ்வார்திருநகரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் சண்முகநாதன் எம்எல்ஏ பேசினார். ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஆழ்வார்திருநகரியில் நடந்தது. கூட்டத்திற்கு, ஆழ்வை நகர செயலாளர் செந்தில்ராஜ்குமார் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் செம்பூர் ராஜ்நாராயணன் (ஆழ்வை), ஆறுமுகநயினார்(வைகுண்டம்), சவுந்திரபாண்டியன்(சாத்தான்குளம்), செங்கான்(கருங்குளம்), முன்னாள் பேரூராட்சி தலைவர் ஆதிநாதன், முன்னாள் யூனியன் சேர்மன் விஜயகுமார், ஒன்றிய அவைத்தலைவர் பரமசிவம், முன்னாள் ஒன்றிய ஜெ.பேரவை செயலாளர் ஞானையா, ஜெ.,பேரவை செயலாளர் ராமகோபால், மாணவரணி செயலாளர் அம்புரோஸ் கிப்டன் முன்னிலை வகித்தனர். முன்னாள் தொகுதி துணைச்செயலாளர் ராஜப்பா வெங்கடாச்சாரி வரவேற்றார்.

கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட செயலாளருமான சண்முகநாதன் எம்எல்ஏ பேசியதாவது, ஜெயலலிதாவிற்கு பிறகு அதிமுகவை கைப்பற்றி சிதைக்க நினைத்த துரோகிகள் இன்று இருக்கிற இடம் தெரியாமல் போய் விட்டனர். அதிமுக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதா வழியில் முதல்வர் எடப்பாடி ஆட்சி நடத்தி வருகிறார். விரைவில் வரஇருக்கும் உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக வெற்றிபெறும். ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை உண்டு. தண்டனையில் இருந்து தப்பிக்கவே முடியாது என்றார்.

இதில், தலைமை பேச்சாளர்கள் முருகேசன், நாஞ்சில் மாதேவன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல், வைகுண்டம் நகர செயலாளர் காசிராஜன், மாவட்ட இளைஞர் பாசறை இணைச்செயலாளர் காசிராஜன், மகளிரணி செரீனா பாக்யராஜ், மாரியம்மாள், சந்திரா, வேம்புஅம்மாள், அமுதா, ஆழ்வை நகர துணைச்செயலாளர் விஸ்வநாதன், இணைச்செயலாளர் மாஜீதா, துணைச்செயலாளர் அனந்தபெருமாள்தாஸ், நாகமணி, கணேசன், மகாராஜா, சரவணன், சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னாள் தொகுதி இணைச்செயலாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Tags : Anna ,birthday party ,Alwarthirunagar ,
× RELATED உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா