×

வாகன நுழைவு கட்டண வசூல் கண்டித்து டோல்கேட்டை முற்றுகையிட்ட த.வா.க.வினர் 40 பேர் கைது

ஓட்டப்பிடாரம் செப்.19: தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டோல்கேட்டில் வசூலிக்கப்படும் வாகன நுழைவு கட்டணத்தை கண்டித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 40 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தனியார் அமைப்புகள் மூலம் டோல்கேட் அமைப்பு வாகன நுழைவு கட்டணம் என்ற சுங்கவரி கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி-மதுரை மெயின் ரோட்டில் புதூர் பாண்டியபுரம் அருகே தனியார் பராமரிப்பில் டோல்கேட் செயல்பட்டு வருகிறது. மெயின் ரோடு அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் புதிதாக சாலை ஏதும் இதுவரை அமைக்கப்படவில்லை. மேலும் அந்த சாலையில் பராமரிப்பு பணிகள் கூட நடைபெறவில்லை என்ற  குற்றச்சாட்டும் அது தொடர்பாக தூத்துக்குடியில் உள்ள லாரி உரிமையாளர் சங்கத்தினர் வழக்கும் தொடர்ந்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ஹிதர் பிஸ்மி தலைமையில் அக்கட்சியைச் சேர்ந்த 40 பேர் புதூர் பாண்டியாபுரம் டோல்கேட்டை முற்றுகையிட்டு கட்டணம் வசூலிக்கப்படுவது கண்டித்து கோஷங்கள் எழுப்பியபடி போராட்டம் நடத்தினர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த புதியம்புத்தூர் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் டோல்கேட் பகுதியில் இருபுறங்களிலும் வாகனங்கள் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : persons ,TULF ,
× RELATED முழு ஊரடங்கை மீறிய 1,564 பேர் மீது வழக்கு: 1,052 வாகனங்கள் பறிமுதல்