×

கொட்டங்காடு பத்திரகாளியம்மன் கோயில் கொடை விழா கொடியேற்றம்

உடன்குடி, செப். 19:  உடன்குடி அருகேயுள்ள பிரசித்திபெற்ற கொட்டங்காடு தேவி பத்திரகாளி அம்மன் கோயிலில் புரட்டாசி கொடைவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை 8மணிக்கு அம்மனுக்கு கும்ப அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நேற்று (18ம் தேதி) காலை 6.30 மணிக்கு யானை மீது கொடிப்பட்ட ஊர்வலம் நடந்தது. முக்கிய வீதிகள் வழியே வலம் வந்த கொடிப்பட்டம் காலை 9மணிக்கு கோயிலை வந்தடைந்ததும் கொடியேற்றம் நடந்தது. இதையடுத்து அம்மன், பவளமுத்து விநாயகர், மற்றும் கொடிமரத்திற்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடந்தது.

இரவு 7.30 மணிக்கு அம்பாள் உள்பிரகார சப்பர பவனி, 8 மணிக்கு சமய சொற்பொழிவு, அன்னதானம் நடந்தது. வரும் 26ம்தேதி வரை கொடை விழாவில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை, உள்பிரகார சப்பர பவனி, ஊஞ்சல் சேவை, வழக்காடுமன்றம், சமய சொற்பொழிவு, பரதநாட்டியம், பக்தி இன்னிசை, இன்னிசை பட்டிமன்றம், திருவிளக்கு பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். வரும்  27ம்தேதி காலை 7மணிக்கு சிறப்பு பூஜை, 8மணிக்கு அன்னதானம், பிற்பகல் 2 மணி, நள்ளிரவு 12மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, மறுநாள் (28ம் தேதி) அதிகாலை 1 மணிக்கு பூஞ்சப்பரத்தில் தேவி பத்திரகாளி அம்மன் வீதியுலா நடைபெறும். இதே போல்  பவளமுத்து விநாயகர் பூஞ்சப்பரத்தில் வீதியுலா நடக்கிறது. 29ம் தேதி காலை 8மணிக்கு உணவு எடுத்தல் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை தர்மகர்த்தா மற்றும் விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags : Temple Donation Ceremony ,
× RELATED மேலத்தெரு யாதவ சமுதாயத்திற்கு...