சாத்தான்குளம் அருகே ஆட்டோ டிரைவரை பிளேடால் வெட்டிய தொழிலாளிக்கு வலை

சாத்தான்குளம், செப்.19: சாத்தான்குளம் அருகே தகராறு செய்தவரை தட்டிக்கேட்ட ஆட்டோ டிரைவரை தாக்கி  பிளேடால் வெட்டிய தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர். சாத்தான்குளம் அருகேயுள்ள கண்டுகொண்டான் மாணிக்கம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பலவேசம் மகன் சண்முகவேல்(37). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் உறவினருடன் அங்குள்ள பிள்ளையார் கோயில் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அதே ஊரைச் சேர்ந்த தொழிலாளி முருகன்(65) அவரது உறவினர் மகளிடம் தகராறு செய்துள்ளார். இதை பார்த்த சண்முகவேல் தட்டிக்கேட்டு அவரை கண்டித்தார். இதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த முருகன், சண்முகவேலை தாக்கி பிளேடால் வயிற்றில் கிழித்துள்ளார்.
இதில் காயமடைந்த அவருக்கு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சண்முகவேல் சாத்தான்குளம் போலீசில் அளித்துள்ள புகாரின்பேரில் எஸ்ஐ பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து முருகனை தேடி வருகிறார்.

Tags : auto driver ,
× RELATED மகனை கழுத்தை நெரித்து கொன்று ஆட்டோ டிரைவர், மனைவி தற்கொலை