×

ஊராட்சி ஒன்றியத்தில் தூய்மை பேரணி

திருக்கோவிலூர், செப். 19: திருக்கோவிலூர் அடுத்த சந்தப்பேட்டையில் ஊராட்சி ஒன்றியம் சார்பில் தூய்மை பேரணி நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரேச்சல்கலைச்செல்வி, செல்லதுரை ஆகியோர் துவக்கி வைத்தனர். தூய்மை பாரதம் இயக்கம் சார்பில் மக்கும் குப்பை, மக்காத குப்பையை தரம் பிரித்துடுவோம், கழிவு நீர் தேங்காமல் பார்த்து கொள்வது, பிளாஸ்டிக் பை உபயோகப்படுத்தவும் உள்ளிட்ட பதாகைகள் வைத்துகொண்டு கோஷங்கள் எழுப்பி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், தொம்மையன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தினகர்பாபு,  ஞானவடிவு, செல்வி, சுந்தரமூர்த்தி, சர்வேஸ்வரன், வட்டார ஓருங்கினைப்பாளர் தாஸ் மற்றும் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், பணிதள பொருப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், துப்புரவு ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Cleanup rally ,
× RELATED திண்டுக்கல் மாவட்டம் கணவாய்ப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை