×

ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் உள்ள 12,959 கோயில் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத்தொகை: முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், அனைத்து உதவி ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் உள்ள 12,959 கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத்தொகையாக ரூ.1000 வழங்கும் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கவுள்ளார். இத்திட்டத்தின் கீழ் இம்மாதம் முதல் பயனாளிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும். எனவே, சரக உதவி ஆணையர்கள் தங்கள் சரகத்தில் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் உள்ள கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள்/பட்டாச்சாரியர்கள் மற்றும் பூசாரிகளை ஆளறிதல் செய்து இக்கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவங்களில் தொகுத்து வரும் 17ம் தேதிக்குள் தவறாது அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட கோயில்களில் பூஜை செய்பவராக இருப்பின் மாத ஊக்கத்தொகை ரூ.1000 மட்டுமே பெற தகுதியுடையவராகிறார். இவ்வாறான இனங்களை தனியாக தொகுத்து அவர் அர்ச்சகராக பூஜை செய்யும் கோயில்கள் பெயரினை பட்டியலிட்டு அனுப்ப வேண்டும். மாத ஊக்கத்தொகை ஆணையர் அலுவலகத்தில் இருந்து பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு இசிஎஸ் மூலம் மாதம்தோறும் அனுப்பப்படும். இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் தொடர்ந்து பயன்பெறுவதை உறுதிப்படுத்திட ஏதுவாக ஆண்டுதோறும் செப்டம்பர் 5ம் தேதிக்குள் ஆளறிதல் செய்து ஆளறிதல் செய்யப்பட்ட விவரத்தினை உதவி ஆணையர்கள் இந்த அலுவலகத்திற்கு 10ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்….

The post ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் உள்ள 12,959 கோயில் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத்தொகை: முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kumarakurubaran ,Hindu Religious Fisheries ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?