×

ஆவடி அருகே குளத்தை ஆக்கிரமித்து கட்டிய 10 கடைகள் இடிப்பு

ஆவடி, செப். 19:  ஆவடி அடுத்த பருத்திப்பட்டு தட்டாங்க்குளத்தை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டு இருப்பதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு புகார்கள் சென்றன. இதனையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆவடி வருவாய் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி நேற்று காலை ஆவடி தாசில்தார் சரவணன். வருவாய் ஆய்வாளர் மோனிகா, கிரமா நிர்வாக அதிகாரி ஜெயப்பிரகாஷ் ஆகியோர் தலைமையில் வருவாய்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர்.அப்போது குளத்தை ஆக்கிரமித்து பத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் கட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் மற்றும் கடைகளை இடிக்கத் தொடங்கினர். இதில் பத்துக்கும் மேற்பட்ட கடைகள் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டன. இதில் ரூ.5 கோடி மதிப்புள்ள 40 சென்ட் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். அசம்பாவிதங்களை நடைபெறாமல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் இனிமேல் குளத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டுபவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆவடி தாசில்தார் சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags : shops ,Demolition ,pond ,Avadi ,
× RELATED அறந்தாங்கியில் நகை, பாத்திர கடைகளில் பயங்கர தீ