×

மண் மாதிரி சேகரிப்பு விழிப்புணர்வு முகாம்

புதுச்சேரி, செப். 19:    புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாய நலத்துறை, கூடுதல் வேளாண் இயக்குநர் (நி.உ.தி.த) அலுவலகம் சார்பில் கூடப்பாக்கம் உழவர் உதவியகத்தில் மண்வள அட்டை மற்றும் மண் மாதிரி சேகரிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. உழவர் உதவியக வேளாண் அலுவலர் சங்கரதாஸ் வரவேற்றார். வேளாண் அலுவலர் (வேதியியல்) அனுப்குமார் உலகளாவிய இடநிர்ணய குறியீட்டு மூலம் மண் மாதிரி சேகரிப்பு பற்றி எடுத்துரைத்தார். வேளாண் அலுவலர் (வேதியியல்) நடராஜன் பயிர் வளர்ச்சிக்கு தேவையான பேரூட்டச்சத்து மற்றும் நுண்ணூட்டச்சத்து பற்றி எடுத்துரைத்தார்.

கூடுதல் வேளாண் இயக்குநர் (நி.உ.தி.த) ரவிபிரகாசம் தலைமை தாங்கி, மண்வள அட்டை மற்றும் மண் மாதிரி சேகரிப்பின் முக்கியத்துவம் பற்றி சிறப்புரை ஆற்றினார். வேளாண் அலுவலர்கள் அமர்ஜோதி, சுசிகலா ஆகியோர் மண் குடும்பங்கள் பற்றி விளக்கி கூறினர். சுற்றுச்சூழல் மற்றும் வேளாண் அபிவிருத்தி மையம் தொண்டு நிறுவன அலுவலர் கணேஷ் மண்வள அட்டை மற்றும் இயற்கை வேளாண்மை பற்றி எடுத்துரைத்தார். இந்த முகாமில் கூடப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 70க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம விரிவாக்க பணியாளர்கள் பாலசுந்தரம், மதிவதனன், நாகராஜ், சாமிநாதசுவாமி மற்றும் அலுவலக உதவியாளர் அன்பழகன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Soil Sample Collection Awareness Camp ,
× RELATED மண் மாதிரி சேகரிப்பு விழிப்புணர்வு முகாம்