×

2 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

புதுச்சேரி, செப். 19: புதுச்சேரியில் 4 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 12 சப்-இன்ஸ்பெக்டர்கள் நேற்று முன்தினம் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி, கோரிமேடு இன்ஸ்பெக்டர் கண்ணன் புதுச்சேரி குற்றப்பதிவேடு பிரிவுக்கு (சிஆர்பி) மாற்றப்பட்டார். ஆனால் அடுத்த நாளே அவர் மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி, இன்ஸ்பெக்டர் கண்ணன், திருக்கனூர் காவல்நிலையத்துக்கு நேற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருக்கனூர் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சிஆர்பிக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை டிஜிபி பிறப்பித்துள்ளார்.

Tags : inspectors ,
× RELATED நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் 174 பதற்றமான வாக்குசாவடிகள்