×

புதுவை அரசு பள்ளிகளில் 4 முதல்வர்கள் இடமாற்றம்

புதுச்சேரி, செப். 19:  புதுவை பள்ளிக் கல்வித்துறையில் 9 விரிவுரையாளர்களுக்கு துணை முதல்வராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 4 மேல்நிலைப் பள்ளிகளின் முதல்வர்களும், 18 துணை முதல்வர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான ஆணையை பள்ளிக்கல்வி சார்பு செயலர் ஏழுமலை பிறப்பித்துள்ளார். ஏனாம் எஸ்டிபிபி பள்ளி முதல்வர் தினகர் நல்லமாலா குருசுகுப்பம் என்கேசி பள்ளிக்கும், அன்னை சிவகாமி அர்பிதா தாஸ் முத்தியால்பேட்டை சின்னாத்தா பள்ளிக்கும், காரைக்கால் தென்னூர் பள்ளி முதல்வர் கேசவ் இந்திரா நகர் பள்ளிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர பாகூர் பாரதி பள்ளியில் பணியாற்றிய எழில் கல்பனா அன்னை சிவகாமி பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விரிவுரையாளர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கும் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி நெல்லித்தோப்பு மணிமேகலை பள்ளி வேதியியல் விரிவுரையாளர் சத்தியவதி, கிருமாம்பாக்கம் அம்பேத்கர் பள்ளிக்கும், இயற்பியல் விரிவுரையாளர் கதிர்வேல் நெட்டப்பாக்கம் கம்பன் பள்ளிக்கும், இளங்கோ அடிகள் பள்ளி உயிரியல் விரிவுரையாளர் பானுமதி திருவண்டார் கோயில் அரசு பள்ளிக்கும், இயற்பியில் விரிவுரையாளர் பூபதி பிஎஸ் பாளையம் பள்ளிக்கும் துணை முதல்வர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கண்ணகி பள்ளி கணித விரிவுரையாளர் பாண்டியன் கூனிச்சம்பட்டு பள்ளிக்கும், சுப்பிரமணிய பாரதி பள்ளி தாவரவியல் விரிவுரையாளர் முல்லைவனம் கரையாம் புத்தூர் பள்ளிக்கும், ஜீவானந்தம் பள்ளி இயற்பியல் விரிவுரையாளர் ஜெயக்குமார் மாகே பல்லூர் விஎன் புருஷோத்தமன் பள்ளிக்கும் துணை முதல்வராக பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் காரைக்கால் அன்னை தெரசா பள்ளி வேதியியல் விரிவுரையாளர் விஜய மோகனா தலத்தெரு என்எஸ்சி போஸ் பள்ளிக்கும், நாவலர் நெடுஞ்செழியன் பள்ளி வணிகவியல் விரிவுரையாளர் நடராஜன் மாகே ஜவஹர்லால் நேரு பள்ளிக்கும் துறை முதல்வர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே அங்கு துணை முதல்வர்களுக்கு மாற்று பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Tags : chiefs ,
× RELATED சட்டத்தில் உள்ள குறைகளை சரிசெய்ய...