ஆர்என் கண்டிகை கிராமத்தில் மனுநீதி நாள் முகாம்

உத்திரமேரூர், செப். 19: உத்திரமேரூர் அடுத்த ஆர்என் கண்டிகை கிராமத்தில் மனுநீதிநாள் முகாம் நேற்று நடந்தது. உத்திரமேரூர் வட்டாட்சியர் சாந்தி தலைமை தாங்கினார். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் ரவிச்சந்திரன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் தனலட்சுமி, தனித்துணை ஆட்சியர் மாலதி, அரசு கேபிள் டிவி தனி வட்டாட்சியர் லோகநாதன், தனி வட்டாட்சியர் ஞானவேல், மண்டல வட்டாட்சியர் இந்துமதி, வட்ட வழங்கல் அலுவலர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதேவி வரவேற்றார்.மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி கலந்து கொண்டு,  இலவச வீட்டுமனைப் பட்டா உள்பட 118 பேருக்கு ₹23 லட்சத்து 22 ஆயிரத்து 720 மதிப்பிடில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

Related Stories: