×

ஊரக வளர்ச்சித்துறை சங்கம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட செயற்குழு கூட்டம்

வாலாஜாபாத், செப்.19: வாலாஜாபாத்தில், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், காஞ்சிபுரம் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், காஞ்சிபுரம் மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் பரணி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் குணசேகரன் சங்க வளர்ச்சி பணிகள் குறித்த ஆண்டறிக்கையை வாசித்த பின்பு தாக்கல் செய்தார். தொடர்ந்து, மாநில செயலாளர் சார்லஸ் சசிகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சங்கத்தின் செயல்பாடுகள், சங்கம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து பேசினார்.

மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை மூலம் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், குடிமராத்து திட்டப்பணிகள் செயல்படுவதில் அரசியல்வாதிகள் குறுக்கிட்டால் ஒன்றியத்தில் பணிபுரியும்  அலுவலர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் மோதல் உருவகிறது. இதை தடுத்து நிறுத்த மாவட்ட செயற்குழு, கலெக்டரை வலியுறுத்துகிறது.ஊரக வளர்ச்சி துறையில் உள்ள காலியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வளர்ச்சி துறையில் அதிகரித்து வரும் பணி நெருக்கடியை கைவிட்டு தனிநபர் வளர்ச்சி திட்டங்களில் உரிய கால அவகாசம் வழங்குவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் நன்றி தெரிவித்தார்.

Tags : Kanchipuram District Executive Committee Meeting ,Rural Development Association ,
× RELATED ராமேஸ்வரத்தில் இந்திய கம்யூனிஸ்ட்...