திமுக செயற்குழு கூட்டம்

பெரும்புதூர், செப்.19:  பெரும்புதூர் தெற்கு ஒன்றிய திமுக அவசர செயற்குழு கூட்டம், கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஒன்றிய செயலாளர் கோபால் தலைமை வகித்தார். இளைஞரணி அமைப்பாளர் குண்ணம் ராமமூர்த்தி வரவேற்றார். ஒன்றிய அவைத்தலைவர் மோகனன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் முருகன், ஜார்ஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், 20ம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெறவுள்ள இந்தி எதிர்ப்பு போராட்டம், இளைஞர் அணி உறுப்பினர் சேர்த்தல் மற்றும் புதுப்பித்தல், 21ம் தேதி குரோம்பேட்டையில் நடைபெறவுள்ள அண்ணா பிறந்த நாள் விழா கருத்தரங்கு குறித்து ஆலோசனை நடந்தது. மாவட்ட துணை அமைப்பாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், ஒன்றிய அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : DMK Working Committee Meeting ,
× RELATED ஆலத்தூர் மேற்கு ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம்