×

ஓடைபாலம் இடிந்து விழுந்தது

திட்டக்குடி, செப். 19: திட்டக்குடி அருகே ஓடைபாலம் உடைந்ததால் அவ்வழியே செல்ல முடியாமல் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். புதிய பாலம் கட்டித்தருமாறு அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள மேலூர் ஓடையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அரசு ஓடைபாலம் கட்டி கொடுத்தது. இப்பகுதி விவசாயிகள் இந்த ஓடை பாலம் வழியாக அவரவர் நிலங்களுக்கு சென்று வந்தனர். இப்பகுதியில் சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பருத்தி, சோளம், கரும்பு ஆகியவற்றை பயிரிட்டுள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக இந்த ஓடை பாலம் உடைந்து கால்வாய் பகுதியிலேயே விழுந்து மூடி உள்ளது. பாலம் முழுமையாக சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் டிராக்டர், மாட்டு வண்டிகள், இருசக்கர வாகனங்களில் செல்வதற்கும், விவசாய இடுபொருட்களை கொண்டு செல்லவும் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் விவசாயிகள் உரம், விதை போன்ற பொருட்களை தலையில் சுமந்து 2 கிலோ மீட்டர் நடந்து சென்றுதான் தங்களின் நிலங்களை அடைய வேண்டிய நிலை உள்ளது. இவ்வழியாக கால்நடைகள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஓடைப்பாலத்தை புதிதாக கட்டித்தர வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : bridge ,
× RELATED மீனவர்கள் கோரிக்கையை ஏற்று ஒருநாள்...