×

ஓசோன் மண்டலத்தை பாதுகாக்க விழிப்புணர்வு பேரணி

கூடுவாஞ்சேரி, செப். 19: ஓசோன் மண்டலத்தை பாதுகாக்க வலியுறுத்தி, காரணைப்புதுச்சேரியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி சார்பில், பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.கூடுவாஞ்சேரி அருகே, ஊரப்பாக்கம் அடுத்த காரணைப்புதுச்சேரி ஊராட்சி அரசு உயர்நிலைப் பள்ளி சார்பில், ஓசோன் மண்டலத்தை பாதுகாக்க வலியுறுத்தி, விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. தலைமை ஆசிரியை சூர்யகலா தலைமை தாங்கினார். துணை தலைமை ஆசிரியை கீதாலட்சுமி, சுற்றுச்சூழல் மன்றம் பொறுப்பாசிரியர் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் செஞ்சிலுவை சங்க பொறுப்பாசிரியர் லதா வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் ஊராட்சி தலைவர்கள் அனிதா இளவரசன், எல்.எஸ்.டில்லிபாபு, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைத்தனர்.

பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணி ஊராட்சியின் முக்கிய வீதிகளில் சென்று மீண்டும் பள்ளியில் முடிவடைந்தது. இதில், 333 மாணவ, மாணவிகள் பங்கேற்று ஓசேன் மண்டலத்தை பாதுகாக்க வலியுறுத்தி மரம் நடுதல், அதனை பாதுகாத்தல், மழைநீரை சேகரித்தல் உள்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகளை கையில் ஏந்தியும், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கியும் சென்றனர். முடிவில் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகி அமாவாசை நன்றி கூறினார்.திருக்கழுக்குன்றம்: உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பேரணியை பள்ளியின் பெற்றோர் - ஆசிரியர் கழக பொருளாளர் தாஜுதீன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளி தலைமையாசிரியை (பொறுப்பு) நளினி, பசுமைப் படை பொறுப்பாசிரியைகள் தமிழரசி, பத்மாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதுப்பட்டினம் புதிய பாலம், பஜார் வீதி, இசிஆர் சாலை, பெரிய கடைவீதி உள்பட முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டு, ‘காப்போம் காப்போம் ஓசோனை காப்போம்’ ‘வாகன புகையை ஒழித்து ஓசோன் ஓட்டையை அடைப்போம்’ உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர்.

Tags : ozone zone ,
× RELATED காவேரிப்பட்டணத்தில் விழிப்புணர்வு...