இளம்பெண் மாயம்

நெய்வேலி, செப். 19: கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியை அடுத்த சுப்பிரமணியபுரம் மாதாகோயில் தெருவை சேர்ந்தவர் மணி மகள் கவிதா (19). இவர் புதுச்சேரி காட்டுக்குப்பத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு சென்றார். ஆனால் மாலை வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் பல்ேவறு பகுதியில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுபற்றி அப்பெண்ணின் தாயார் கல்யாணி அளித்த புகாரின்பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED இளம்பெண் மாயம்