×

இலவச வீட்டுமனை கோரி மனு

விருதுநகர், செப். 17: வத்திராயிருப்பு அருகே உள்ள எஸ்.ராமச்சந்திராபுரம் கிராம அருந்ததிய மக்கள் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
எஸ்.ராமச்சந்திராபுரம் 9வது வார்டில் அருந்திய சமூகத்தை சேர்ந்த 50 குடும்பத்தினர் வசிக்கிறோம். 50 குடியிருப்புகளுக்கு மட்டும் குடிநீர் வருவதில்லை.
45 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுகிறது.
மேலும், தெருவில் உள்ள குடிநீர் தொட்டி பழுதாகி மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அதை சரி செய்து உடனே தண்ணீர் வழங்க வேண்டும். 45 நாட்களுக்கு
ஒரு முறை விநியோகம் செய்யப்படும் தண்ணீரை வாரம் ஒரு முறை வழங்க வேண்டும்.
மேலும் ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருவதால் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என மனுக்கள் அளித்தனர்.

Tags :
× RELATED மத வழிபாட்டுத் தலங்களை திறக்க கோரிய மனு: உயர்நீமன்றம் தள்ளுபடி